மெக்சிகோ ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்து!

மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பேனா நீட்டோவை பதவி விலக கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் சுதந்திர தினம் எதிர்வரும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்த பேரணி நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்தகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த பேரணியில் பங்கெடுத்தவர்கள் கறுப்பு நிற ஆடைகள் அணிந்தும் ஜனாதிபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளை ஏந்தியவாறு தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
என்ரிக் பேனா நீட்டோவின் போதைப் பொருள் மற்றும் ஊழல் தொடர்பாக கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் மீது அதிருப்தி கொண்ட மக்களே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மெக்சிகோ அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் அங்கு தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|