முன்னாள் பிரதமர் வெளிநாடு செல்லத் தடை!

ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூஸுப் ரஷா கிலானி நாட்டைவிட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
லாஹுர் விமான நிலையத்தின் ஊடாக பாங்கொக் செல்ல முற்பட்டபோது, தடைசெய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் அவரது பெயர் உள்ளதாக தெரிவித்த குடிவரவு அதிகாரிகள் இவ்வாறு தடை விதித்துள்ளனர்.
தாம் பாகிஸ்தானிய நீதிமன்றங்களினால் சமுகமளிக்குமாறு கோரப்படும் உத்தரவுகள் அனைத்திற்கும் கீழ்படிந்துள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர், தமது பெயரை தடைசெய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது நீதியற்ற செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
யூஸுப் ரஷா கிலானிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் மொத்தமாக 12 கோடியே 97 இலட்சம் இந்திய ரூபா, பாகிஸ்தான் திறைசேரிக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|