முன்னாள் பிரதமரிமிருந்து பாரத ரத்னா விருதை மீளப் பெறுமாறு தீர்மானம் !

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மீளப் பெறுமாறு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியினரால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான இந்திராகாந்தி கடந்த 1984 ஆம் ஆண்டு சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை அடுத்து, இந்தியா முழுவதிலும் 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட சீக்கிய சமூகத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
விசேடமாக 2 ஆயிரத்து 100 பேர்வரையில் டெல்லியில் மாத்திரம் படுகொலை செய்யப்பட்டனர்
இந்த வன்முறைக்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்ப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனையும் மேலும் இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த வன்முறைக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தொடர்புகள் இருப்பதாக ஆம் ஆத்மீ கட்சித் தரப்பினர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை மீள பெற வேண்டும் என டெல்லி சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்
Related posts:
|
|