மீண்டும் சோதனையை நடத்தியது வடகொரியா!
Saturday, June 24th, 2017
அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் வகையில் வடகொரியா புதிய ரொக்கெட் என்ஜின் ஒன்றை பரிசோதித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த என்ஜின் சோதனை அமெரிக்காவை நோக்கி செலுத்தப்படவுள்ள ஏவுகணைகளில் உபயோகப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகளால் கொரிய தீபகற்பம் பாதிப்படையும் தருவாயில் உள்ளமையால் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தமையே வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் குறித்த ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையிலேயே அவற்றைப் புறந்தள்ளி மீண்டும் ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதுபோன்ற தொடர்ச்சியான ஏவுகணை சோதனை நடவடிக்கைககள் வடகொரியாவின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் அதிகரித்துச் செல்வதைக் காட்டுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


