மீண்டும் ஏவுகணை சோதனைக்கு வடகொரியா திட்டம்: அச்சத்தில் ஜப்பான்!

தேசிய நிறுவன நாளை முன்னிட்டு வடகொரியா மீண்டும் அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனையில் ஈடுபடலாம் என ஜப்பான் அச்சம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா அண்மையில் கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது.
அத்துடன் ஆறாவது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த நிலையில், நாளை அந்நாட்டின் தேசிய நிறுவன நாள் கொண்டாடப்படவுள்ளதால் மீண்டும் அணுகுண்டு அல்லது ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபடலாம் என ஜப்பான் கணித்துள்ளது.கடந்த ஆண்டு நடந்த தேசிய நிறுவன நாள் கொண்டாட்டத்தின்போது ஐந்தாவது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு!
இலண்டனில் அதிஉச்ச பாதுகாப்பு !
பிரதமர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - ஈராக் நாடாளுமன்ற...
|
|