மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,
இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி அந்தச் சென்றுகொண்டிருந்தபோது நடுக்கடலில் கவிழ்ந்த அந்தக் படகிலிருந்து 25 பேரை ‘எஸ்ஓஎஸ் மெடிட்ரேன்’ என்ற மீட்புக் கப்பல் மீட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களில் ஏராளமான பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவா் என்று மீட்கப்பட்டவா்கள் தெரிவித்தனா்.
இதேவேளை மிகவும் ஆபத்தான அகதிகள் வழித்தடமான மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு மட்டும் 2,500 போ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல ஆணையம் தெரிவித்துள்ளது.
லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலிக்கு படகு மூலம் பயணித்த 60 பேர் மூழ்கியிருக்கலாம் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து இத்தாலிய கடலோரக் காவல்படையின் ஒருங்கிணைப்பில் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது 25 பேர் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|