மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி!

உலக சுகாதார நிறுவனம், அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளின் எல்லைகளில், மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி இயக்கத்தைத் துவங்க உள்ளது.
இந்த பிரசாரம், அடுத்த சில வாரங்களில், தொற்று நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள காங்கோவின் தலைநகரான கின்ஷசாவிலும் தொடங்கப்படவுள்ளது.
பத்து வருடங்களில் மிக மோசமான மஞ்சள் காய்ச்சல் பரவலாகக் கருதப்படும் இந்நோய் முதலில் அங்கோலாவில் பரவ தொடங்கியது, அங்கு இதுவரை சுமார் 350 பேர் பலியாகியுள்ளனர் . காங்கோவில் எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அங்கோலாவில் அதிக அளவில் நடத்தப்படும் தடுப்பூசி பிரசாரங்களால் உலக அளவில் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சேமிப்பு பெருமளவு குறைந்துவிட்டது.
Related posts:
போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாமே - ஒப்புக் கொண்டது இஸ்ரேல்!
ஒரே நாளில் 1000 பேர் பலி - 33,000 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று!
ரஷ்யா மீதான தடை: மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடும் சீன அதிபர்!
|
|