மக்ரோங் உறுதுணையாக இருப்பார்- தெரேசா மே!

Tuesday, May 9th, 2017

 

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இமானுவேல் மக்ரோங், பிரெக்சிற் பேச்சுவார்த்தையின் போது உறுதுணையாக இருப்பார் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர்  மேலும் கருத்து தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோங் அபார வெற்றியீட்டியுள்ளமை சிறந்த விடயமாகும். அவருக்கு சிறந்த அதிகாரம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் கைகளிலும் சிறந்த அதிகாரம் உள்ளது. பேச்சுவார்த்தைகளின் போது பிரித்தானியாவைப் போலவே சிறந்த அதிகாரம் உள்ள ஒரு நாடு அவசியம் வேண்டும்”  என தெரிவித்தார்.

Related posts: