போருக்கு ஆயத்தமாகும் வடகொரியா: பொதுமக்களுக்கு பயிற்சி!

சர்ச்சைக்குரிய கொரிய தீபகற்பத்தில் போருக்கு ஆயத்தமாகும் வகையில் முக்கிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு வெளியேறும் பயிற்சிகளை வடகொரியா வழங்குவதை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சீனாவின் அழுத்தமும் வடகொரியாவை போரின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக அந்த நாடு முக்கிய நகரங்களில் உள்ள பொதுமக்களுக்கு சிறப்பு போர்கால பயிற்சிகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.கடந்த வாரம் துவங்கிய இந்த பயிற்சிகளில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டதாக பல முன்னணி பத்திரிகைகள் ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டுள்ளன.மட்டுமின்றி போர்க்காலங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் blackout பயிற்சியையும் முக்கிய நகரங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.இருப்பினும் தலைநகரில் இதுவரை எவ்வித சலசலப்பும் இல்லை எனவும் நாட்டின் கிழக்கு பகுதி மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பயிற்சியை பொறுத்தமட்டில் எதிரிகளுக்கு இருப்பிடத்தை உணர்த்தாமல், மொத்த இருட்டில் தங்கள் அன்றாட பணிகளை மெற்கொள்வதாகும்.இதுபோன்ற பயிற்சிகள் வடகொரிய வரலாற்றில் முதன்முறை என ராணுவ தென் கொரிய ராணுவ உயரதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|