போரின் கொடுமைகள் மீண்டும் நடக்கக் கூடாது: ஜப்பான் பிரதமர் உருக்கம்!

Wednesday, December 28th, 2016

75 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவின் பியர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தனது நாடு நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது உண்மையான மற்றும் மனப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கப்பற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் கலந்து கொண்டு உரையாற்றிய ஷின்சோ அபே, பியர்ல் ஹார்பர் தாக்குதலில் தங்களின் உயிரை இழந்தவர்களின் நினைவாக கட்டப்பட்ட இந்த நினைவகத்துக்கு வந்த பிறகு, இங்கு நிலவும் மனப்பூர்வமான உண்மையினால் தான் பேச்சற்ற நிலையில் உணர்வதாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு அவர்களுடைய பொறுமைக்காக நன்றி கூறுவதாக தெரிவித்த அபே, போரின் கொடுமைகள் மீண்டும் நடக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

பியர்ல் ஹார்பரில் அமைந்துள்ள நினைவகத்துக்கு அபே வருகை புரிந்தது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வருகை என குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, போரினால் ஏற்பட்ட ஆழமான மன வடுக்கள் கூட நட்புக்கும், நீடித்த சமாதானத்துக்கும் வழிவகுக்குகிறது என்பதற்கு இதுவே ஒரு நினைவூட்டல் என்று கூறினார்.

_93154473_memory

Related posts: