போப் தலைமையில் நீஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வமதக் கூட்டம்!

Sunday, September 25th, 2016

 

பிரெஞ்சு நகரமான நீஸில் கடந்த ஜூலை மாதத்தில், ஜிஹாதி ஒருவர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட சர்வமதக் கூட்டம் ஒன்றை போப் பிரான்சிஸ் நடத்தியுள்ளார்.

அந்த தாக்குதலில் காயம் அடைந்து தப்பி பிழைத்து மனக் கலக்கமடைந்தவர்களையும் போப் பிரான்சிஸ் சந்தித்துள்ளார்.பிரெஞ்சு தேசிய நாளைக் குறிக்கும் விதமாக நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியின் இறுதியில், கடற்கரைக்குமுன் திரண்டிருந்த கூட்டத்தினர் மீது துப்பாக்கிதாரி ஒருவர் ட்ரக்கை செலுத்தியதில் 86 பேர் உயிரிழந்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, வத்திகானில் இருக்கும் போப் பிரான்சிஸை சந்திக்க சுமார் 200 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.இஸ்லாமியர்கள், யூதர்கள், பழமைவாத மற்றும் ப்ரொட்டெஸ்டன்ட் பிரதிநிதிகள் போப் பிரான்சிஸ் உடன் கலந்து கொண்டனர்.

_91367329_26a45eff-cc6e-49bc-9939-6c0b7fbc5d09

Related posts: