பேருந்து குடைசாய்ந்து விபத்து – வடகொரியாவில் 36 சுற்றுலாப் பயணிகள் பலி!
வட கொரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 36 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேரூந்து குடைசாய்ந்ததை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில் 32 பேர் சீனர்கள் எனவும் ஏனைய நான்கு பேரும் வடகொரியாவைச் சேர்ந்தவர்கள். என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே வட கொரியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீதமானவர்கள் சீனர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருடாந்தம் ஒரு லட்சம் வெளிநாட்டவர்கள் வட கொரியாவிற்கு விஜயம் செய்வதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
Related posts:
இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடிப்பு - 20 பேர் உயிரிழப்பு!
மனநல மருத்துவமனையில் பாரிய தீ – உடல் கருகி 6 பேர் பலி!
அரசுக்கு எதிரான போராட்டம் - ஈராக்கில் 319 பேர் பலி!
|
|
|


