புதிய விமானங்களை வாங்குவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இரத்து: டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், புதிய விமானங்களை வாங்குவது தொடர்பாக செய்யப்பட்ட முற்பதிவுகளை இரத்து செய்வதன் மூலம், அரசாங்கத்தின் செலவினங்களை குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய விமானங்களை வாங்குவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இரத்து: டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்த தகவலை ட்ரம்ப் தனது சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனடிப்படையில், போயிங் விமான நிறுவனம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்காக 747 எயார் ஃபோர்ஸ் 1 எனும் விமானத்தை தயாரித்து வருகின்றதாகவும் டொனால்ட் ட்ரம்ப தெரிவித்துள்ளார்.
செலவுகள் கட்டுப்பாட்டை மீறி செல்வதாகவும் குறித்த விமானத்திற்கான முற்பதிவை இரத்து செய்யப்போவதாகவும் டொனால்ட் ட்ரம்ப தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அரசாங்கம் போயிங் விமான நிறுவனத்திடம் இரண்டிற்கு மேற்பட்ட விமானங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த விமான தயாரிப்புக்களுக்காக அமெரிக்க அரசாங்கம் கணிசமான தொகையை செலவிட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த முற்பதிவுகள் மற்றும் புதிய விமானக் கொள்வனவிற்கான ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதன் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடியும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ட்ரம்பின் குறித்த இந்த அறிவிப்பினால், போயிங் நிறுவனத்தின் பங்குகள் 1 சதவீதம் சரிந்துள்ளதாகவும் எனினும், சரிவில் இருந்து மீள எழும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நேற்றைய தினம் ஜப்பானை சேர்ந்த சொஃப்ட் பேங் நிறுவனம் 50 பில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கு இணங்கியுள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|