புதிய ஏவுகணை சோதனை..ஜப்பானை மிரட்டும் வட கொரியா!
Saturday, July 29th, 2017
வட கொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய ஏவுகணை ஜப்பான் நிலப்பரப்பில் தரையிறங்கியதாக ஜப்பான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளது.
கடந்த யூலை மாதம் ஐ.நாவின் தடையை மீறி வடகொரியா முதன் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது நினைவுக் கூறதக்கது.
புதிய ஏவுகணையின் தாக்குதல் வரம்பு கண்டறியப்படாத நிலையில் அது அலாஸ்கா வரை சென்று தாக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுகணை சோதனை உறுதி செய்யப்பட்டால் 2017ம் ஆண்டில் வட கொரியா மேற்கொள்ளும் 14வது ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மெகுனு புயல்: எமனில் 5 பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவை வாட்டியெடுக்கும் கடும் குளிர்!
அனிமேஷன் ஸ்டுடியோவில் தீ விபத்து - 38 பேர் காயம்!
|
|
|


