புடினை சந்தித்தார் இம்மானுவேல் மேக்ரோன்

Wednesday, May 31st, 2017

பிரான்ஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடினை இம்மானுவேல் மேக்ரோன் சந்தித்து பேசியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியாக இரு வாரங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற இம்மானுவேல் மேக்ரோன், இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்நிலையில் பாரீஸ் நகரின் வெளியில் அமைந்துள்ள வெர்சைல்ஸ் அரண்மையில் ரஷ்ய ஜனாதிபதி புடினை, மேக்ரோன் சந்தித்து பேசியுள்ளார்.

பிரான்ஸ் தேர்தல் பிரசாரத்தின் போது ரஷ்ய ஊடகங்கள் ஜனநாயகத்தின் வழிவகையில் தலையிட முயல்வதாக மேக்ரோன் அணியினர் குற்றம்சாட்டிய பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தன்னை சந்திக்க வந்த புடினை, மேக்ரோன் கைகுலுக்கி வரவேற்றார்.

சந்திப்புக்கு பின்னர் மேக்ரோன் கூறுகையில், பல சர்வதேச மோதல்களை சமாளிக்க வேண்டியுள்ளதால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமான ஒன்று. சிரியாவின் உள்நாட்டு போர், உக்ரைன் மோதல் ஆகிய விடயங்களால் இருநாட்டு உறவில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியாக ஹாலண்டே இருந்தபோது பாரீஸ் மாற்றும் மாஸ்கோ உறவு பதட்டமாகவே இருந்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் விவகாரத்தில் சிறிய அளவில் கூட சலுகை காட்ட முடியாது எனவும், ஜி-7 நாடுகள் கூட்டமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வர தயாராக இருந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: