புடினின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விமான நிலையத்திற்கும் இடையில் தீ பரவல்!
Friday, August 11th, 2023
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் வுனுகோவோ விமான நிலையத்திற்கும் இடையில் மொஸ்கோவின் – ஒடின்ட்சோவோ நகரில் உள்ள கிடங்கு தீப்பற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில், ரஷ்யாவின் அவசர சேவை அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோவோ – ஓகாரியோவோவில் உள்ள ஜனாதிபதி புட்டினின் இல்லத்திலிருந்து 6.5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிடங்கில் இவ்வாறு தீப்பற்றியமை குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எனினும் குறித்த பகுதியில் இரண்டாயிரம் சதுர மீற்றர் அளவில் தீ பரவியுள்ளதாக அந்த நாட்டின் அவரச சேவையை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது - உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தால் பரபரப்பு!
கொவிட்-19 தொற்று இனி உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
வியட்நாமில் ரஷ்ய ஜனாதிபதி - போரை ஊக்குவிப்பதற்கான தளம் என அமெரிக்கா விமர்சனம்!
|
|
|


