புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம்- கென்ய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம் என கென்ய அரசாங்கத்திற்கு கென்யாவின் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
உலகின் மிகப் பெரிய அகதி முகாம் தொகுதியாக இந்த முகாம் காணப்படுகின்றது. யுத்தம் காரணமாக சோமாலியாவிலிருந்து தப்பி வந்த 2 இலட்சம் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதி முகாமை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் ஏற்புடையதல்ல எனவும், முகாம்களை மூட முடியாது எனவும் மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டடாப் (Dadaab ) என்ற முகாமையே இவ்வாறு மூட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது
Related posts:
பேருந்தொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்து: நேபாளத்தில் 31 பேர் பலி!
அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்!
|
|