பிலிப்பைன்ஸ் பாடசாலைக்குள் பயங்கரவாதிகள்!
Friday, June 23rd, 2017
பிலிப்பைன்ஸின் பாடசாலை ஒன்றுக்குள் இன்று காலை திடீரென உள்நுழைந்த பயங்கரவாதிகள் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டை அடுத்து பின்வாங்கியுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸின் தெற்கு Pigcawayan நகரில் அமைந்துள்ள பாடசாலைக்குள் இன்று (புதன்கிழமை) உள்நுழைந்த பயங்கரவாதிகள் மாணவர்கள் சிலரையும் பொதுமக்களையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
எனினும் மாணவர்கள் எவரும் பணயக்கைதிகளாக பிடிக்கப்படவில்லை என்று பிரியேடியர் ஜெனரல் ரெஸ்டிடோடோ பாட்டிலா (RESTITUTO PADILLA) தற்போது தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், ஐந்து பொதுமக்கள் பயங்கரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ பயங்கரவாதிகள் குறித்த பகுதியிலிருந்து பின்வாங்கிவிட்டனர். பாடசாலைப்பகுதி தற்போது பாதுகாப்பாக உள்ளது. இந்த விடயத்தில் எமது இராணுவத்தினர் விரைவாக செயற்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், பங்சமோரா இஸ்லாமிய சுதந்திர போராளிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 300 பேர் ஆயுதங்களுடன் பாடசாலைக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராவி பகுதியில் ஏற்கனவே பயங்கரவாதிகள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில் ஐந்தாவது வாரமாகவும் மோதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் மராவியிலிருந்து 190 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள Pigcawayan நகரில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பது மேலும் பதற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|
|


