பிலிப்பைன்ஸில்100 நாட்களில் 3,600 பேருக்கு மரண தண்டனை !

Tuesday, October 11th, 2016

பிலிப்பைன்ஸில் கடந்த 100 நாட்களில் 3,600 கைதிகளுக்கு மேல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக Rodrigo Duterte என்பவர் கடந்த மே மாதம் பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டில் போதை மருந்து கடத்தல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால், இக்குற்றங்களில் ஈடுப்படுபவர்களை இரக்கமின்றி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதிமொழி எடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் போதை மருந்து கடத்தல் தொடர்பாக கைது செய்யப்படும் குற்றவாளிகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 36 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதாவது, ஜனாதிபதி பதவியேற்று தற்போது 100 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வரை சுமார் 3,600 பேருக்கு மேல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.எனினும், போதை மருந்து கடத்தியதாக தற்போது வரை சுமார் 22,500 பேர் பிலிப்பைன்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பேசியபோது, ‘ஹிட்லர் எவ்வாறு யூதர்களை கொன்று குவித்தாரோ, அவரைப் போலவே போதை மருந்தை கடத்தும் குற்றவாளிகளை நான் கொன்று குவிப்பேன்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.பிலிப்பைன்ஸ் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவதில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FILIPPINE_-_0510_-_Presidente

Related posts: