பிலிப்பைன்ஸில் பதிவானது சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!
Thursday, July 11th, 2024
பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் Soccssargen இலிருந்து 106 km தொலைவில் உள்ள Celebes கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கம் 620 கிமீ (385 மைல்) ஆழத்தில் இருந்தது மற்றும் அப்பகுதியில் பரவலாக உணரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொவிட் 19 தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரிப்பு!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கொழும்பு ஆயர் விஷேட சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 10 இலட்சம் - லிட்ரோ நிறுவன...
|
|
|


