பிரேசில் முன்னாள் நிதி அமைச்சர் கிடு மான்டெகா கைது!

பிரேசில் அரச எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராஸில் ஏற்பட்ட பெரிய ஊழல் திட்டம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் கிடூ மான்டெகா கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா மற்றும் தில்மா ரூசெஃபின் அரசாங்கங்களின் கீழ், மான்டெகா கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக (2005 முதல் 2015 வரை) அமைச்சராக இருந்தவர்.
அவர் சௌ பாலோ மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி ஒரு அறுவை சிகிச்சைக்காக அங்கிருந்தார்.
பெட்ரோப்ராஸின் விவகாரம் தொடர்பாக ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணைகளை லூலா எதிர்கொள்கிறார்.
முன்னாள் அதிபர் தொடர்ந்து இந்த குற்றங்களை மறுத்து வருகிறார். அவற்றை அரசியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
கடல்மட்ட உயர்வால் நீரில் மூழ்கும் தீவுகள்!
தலித்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து குஜராத்தில் பேரணி!
சரித்திரம் படைக்கும் ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ!
|
|