பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவருக்கும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தல் – பிரித்தானிய அரசாங்கம்!

Saturday, May 23rd, 2020

பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவுக்குள் பிரவேசிப்பவர்கள் தாம் சுயதனிமைப்படுத்தலில் உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு தவறும் பட்சத்தில் ஆயிரம் யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என அந்த நாட்டு உற்விவகார செயலாளர் ப்ரீட்டீ படேல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக கொரோனா பரவும் வேகத்தை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவில் நேற்றையதினம் கொரோனா தொற்று காரணமாக 351 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் கொரோனா தொற்றுறுதியான 3 ஆயிரத்து 287 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் பிரித்தானியாவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 54 ஆயிரத்து 195 ஆக அதிகரி;துள்ளதோடு இதுவரையில் 36 ஆயிரத்து 393 பேர் பலியாகியுள்ளனர்.

இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்து 98 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சர்வதேச ரீதியில் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 415 பேர் பரியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான 21 இலட்சத்து 50 ஆயிரத்து 855 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: