பிரித்தானியாவில் பொருளாதார வீழ்ச்சியால் வட்டி விகிதங்கள் உயர்வு!

2018 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பிரித்தானியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்குக் காரணம் கடுமையான பனிப்பொழிவே என அந்த ஊடகங்கள் கூறியுள்ளன. இருப்பினும் பிரித்தானியாவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு சீரற்ற காலநிலையை மட்டும் குறைகூற முடியாதென தேசிய புள்ளிவிவரவியல் திணைக்களம் கூறியுள்ளது.
கடந்த ஜனவரியில் பிரித்தானியாவில் கட்டுமானப் பற்றாக்குறை காணப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாமெனவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.
இதனிடையே எதிர்வரும் மே மாதத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவது தொடர்பாக இங்கிலாந்திலுள்ள வங்கியொன்று கவனம்செலுத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
ஆப்கான் - பாகிஸ்தான் இடையேயான எல்லைப்பகுதி மூடப்பட்டது!
அமெரிக்க இராணுவத்தின் தளம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டம்!
கென்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பலி!
|
|