பிரிகோஜின் சிக்கலான விதியை கொண்டவர் – வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த புடின்!
Friday, August 25th, 2023
வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், ப்ரிகோஷின் குறித்து குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புடின், “திறமையான தொழிலதிபர், 1990 களில் இருந்து அவரை நன்கு அறிவேன்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரிகொஜின் தனது வாழ்வில் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார், ஆனால் அவர் தேவையான முடிவுகளையும் அடைந்தார்.
பிரிகோஜின் சிக்கலான விதியை கொண்டவர் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விபத்து குறித்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கும் விவரங்களை ரஷ்யா தீவிரமாக ஆராயும், ஆனால் சம்பவம் தொடர்பான பிற விவரங்களுக்கு கூடுதல் நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
விமான விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுகாதார விதிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தேசிய சுதந்திர நிகழ்வுகள் நடத்தப்படும் - பாதுகாப்பு...
பயணக்கட்டுப்பாடுகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு...
ஈரானுடன் மோதலை விரும்பவில்லை - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவிப்பு!.
|
|
|


