பிரான்ஸ் ஜனாதிபதி – ஈரான் ஜனாதிபதி இடையே தொலைபேசி உரையாடல்!

Thursday, June 27th, 2019

அமெரிக்காவுடன் பதற்றமான நிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஈரான்-பிரான்ஸ் ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு மனநலம் குன்றிவிட்டது என ஈரான் ஜனாதிபதி அவமானப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இருவரும் தொலைபேசியில்உரையாடியுள்ளனர். இந்த உறையாடல் குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த மக்ரோன் கூறியதாவது, பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பதை ஈரான் விரும்பவில்லை.

அதே சமயம், அமெரிக்கா உட்பட எந்த நாட்டினருடனும் ஒருபோதும் போரை விரும்பவில்லை என ஈரான் ஜனாதிபதி ரூஹானி குறிப்பிட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

Related posts: