பிரான்ஸில் முக்கிய தடை!

Thursday, September 7th, 2017

 

பிரான்ஸில் 2040-ஆம் ஆண்டில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி தடைசெய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

கூட்டத்தின் முடிவில் வரும் 2040-ஆம் ஆண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை பிரான்ஸில் தடை செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுஇதற்கான மசோதா தயாராகிவிட்ட நிலையில், இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

தற்போது பிரான்ஸில் 63 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் உள்ளதுஉலகில் இது போன்ற தடையை பிரான்ஸ் தான் முதன் முதலில் கொண்டு வரபோவதாகவும், புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் இந்த தடை சட்டம் வரப்போவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரியிலிருந்து மின்சாரம் எடுப்பதை பிரான்ஸ் தடை செய்யும் எனவும், 2040-ல் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் விற்பனையை நிறுத்துவதே தனது நோக்கம் எனவும் நிக்கோலா முன்னரே கூறியது குறிப்பிடத்தக்கது

Related posts: