பாரவூர்தியால் ஏற்பட்ட கோர விபத்தில் 21 பேர் பலி!
Thursday, April 19th, 2018
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் இடம்பெற்ற பாரவூர்தி விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பாரவூர்தி திருமண நிகழ்வொன்றுக்கு சென்று மீண்டும் திரும்பி பாலம் ஒன்றின் வழியாக பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்ததால் குறித்த விபத்துஇடம்பெற்றுள்ளது.
இதன்போது அந்த பாரவூர்தியில் சுமார் 50 பேர் பயணித்துள்ள நிலையில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்தெரிவிக்கின்றன. இதன்போது பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Related posts:
பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 18 பேர் பலி!
இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா நல்ல உறவைப் பேணி வருகிறது ரஷ்யா - ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவி...
அமெரிக்கா தன்னை "பூமியில் கடவுளின் தூதுவராக கருதுகின்றது – ரஷ்ய அதிபர் புடின் கடும் குற்றச்சாட்...
|
|
|


