பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் மேலதிக பொலிஸ் மா அதிபர் பலி!
Saturday, November 25th, 2017
பாகிஸ்தான் பெஷாவரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் மேலதிக பொலிஸ் மா அதிபர் அஷ்ரப் நுர் பலியானார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் குறித்த தாக்குதலில் அவரது மெய்பாதுகாவலரும் பலியானார்.அவருக்கு பாதுகாப்பு வழங்கிய ஆறு காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக பொலிஸ் மா அதிபர் பயணித்த வாகனத்தை, உந்துருளியில் பின்தொடர்ந்த தற்கொலை குண்டு தாரி மோதி வெடிக்கவைத்துள்ளார். சாலையோரத்தில் உள்ள பல மரங்கள் மற்றும் வீதிகளில் சென்ற ஏனைய வாகனங்களும் தீப்பற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவினரும் உரிமை கோரவில்லை
Related posts:
கொல்லம் கோயிலில் தீ விபத்து:பாகிஸ்தான் ஆழ்ந்த இரங்கல்
அமெரிக்க கொலராடோ வால்மார்ட் கடையில் துப்பாக்கி சூடு: 2 பேர் உயிரிழப்பு!
வெடிகுண்டு மிரட்டல் - அவசரமாக தரையிறங்கிய விமானம்!
|
|
|


