பராக் ஒபாமாவை தவிர்த்து புடின் !

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், விடைபெற்று செல்லவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை தவிர்த்து ஜனாதிபதியாக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு மாத்திரம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்திருக்கும் நிலையிலேயே புடின், இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.
டிரம்புக்கு அனுப்பி இருக்கும் புத்தாண்டு வாழ்த்தில், ஜனவரி 20 ஆம் திகதி டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஆக்கபூர்வமான உறவை ஏற்படுத்துவது குறித்து வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் இணையத்தில் ஊடுருவி ரஷ்யா முக்கிய தகவல்களைத் திருடியதாகவும், அதன் மூலம் தேர்தல் முடிவை மாற்ற சதி நடந்திருப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து ரஷ்ய தூதரக அதிகாரிகளை அமெரிக்க அரசாங்கம் கடந்த வியாழக்கிழமை, வெளியேற்றியது.
Related posts:
|
|