பயங்கர ஆயுதங்களுடன் பறந்த ரஷ்ய விமானங்கள்!

Saturday, August 26th, 2017

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் வடகொரியா செவி சாய்க்கவில்லை

அதுமட்டுமின்றி வடகொரியா தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பகுதிகளைக் குறிவைத்தே ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

வடகொரியாவின் இந்த செயல்பாட்டிற்கு ரஷ்யா ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பசிபிக் கடலில் தென்கொரியா மற்றும் ஜப்பான் பகுதியில் அணு ஆயுதங்களைச் சுமந்த விமானங்களை ரஷ்யா பறக்கவிட்டுள்ளது.

 அதிநவீன Russian Sukhoi-35 என்ற பைட்டர் ஜெட் விமானங்களும் பறந்துள்ளனஇதுகுறித்து ரஷ்ய இராணுவ அமைச்சகம் தெரிவிக்கையில், நடுவானில் பறக்க விடப்பட்ட விமானங்கள் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் என்று தெரிவித்துள்ளது.வடகொரியாவுடன் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ரஷ்யா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளை அச்சுறுத்துவதற்காக இவ்வாறு பறக்கவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஆனால் சமீபத்தில் ஐ.நா-வில் வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த புதிய தீர்மானத்தை ரஷ்யா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது

Related posts: