பயங்கரவாதிகளின் முகாம் முற்றாக அழிப்பு!

Monday, July 8th, 2019

இந்தியாவின் வட கிழக்கு பிராந்தியமான மணிப்பூரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம் ஒன்றை இராணுவம் முற்றாக அகற்றியுள்ளது.

அந்த பிராந்தியத்தில் உள்ள பெரிய ஆயுத அமைப்பான நாகலாந்து தேசிய சோசலிச சபை மத்திய அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இராணுவம் அவர்களிற்கு சொந்தமான பாரிய முகாம் ஒன்றை சுற்றி வளைத்துள்ளனர்.

அந்த முகாமில் இருந்த ஆயுத குழுவின் உறுப்பினர்களே பொதுமக்களின் பணத்தை பலவந்தமாக பெற்று வந்துள்ளனர் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவம் முகாமினை கைப்பற்றிய போது ஆயுதகுழுவின் உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை.

இருப்பினும், பல நவீன ரக ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக இராணுவம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுத குழு கடந்த 1980 ஆம் ஆண்டு 85 வயதான துயின்கலெங் முய்வா என்பவரால் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்தியாவின் பெரு நிலப்பரப்பில் இருந்து தனிநாடொன்றை கோரிய இந்த ஆயுதகுழு கொலை, பலாத்காரமாக பண வசூலிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், அமைப்பின் ஸ்தாபகர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: