பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து : இந்தோனேஷியாவில் 23 பேர் உயிரிழப்பு!
Friday, October 27th, 2017
இந்தோனேஷியாவில் டாங்ஜெராங் என்ற இடத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீ மற்றும் கரும்புகை காரணமாக மீட்ப்புபணி சவாலாக இருப்பதாக மீட்புப்படையினர் கூறியுள்ளனர். மேலும், 103 தொழிலாளர்கள் விபத்து நடந்த வேளையில் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
ஜோடான்- இஸ்ரேல் இடையே முரண்பாடு!
கொரோனா: அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம் – எச்சரிக்கும் நியூயார்க் ஆளுநர்!
உலகளவில் 42 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை - 14 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் அத...
|
|
|


