நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் மரணம்

கடந்த 2010ஆம் ஆண்டிற்கான சமாதான நோபல் பரிசினை பெற்ற லியு சியாபோ Liu Xiaobo) தமது 61வது வயதில் காலமானார்
ஈரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான அனுமதி, சீன அரசாங்கத்தால் மறுக்கப்பட்டதாக சர்வதேச ரீதியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது
இந்த விடயம், சீனாவின் உள்விவகாரம் என தெரிவித்துள்ள சீன அதிகாரிகள், இது குறித்து அநாவசிய விமர்சனங்களை வெளியிட வெளிநாட்டவர்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என தெரிவித்துள்ளனர்
சீன அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 11 வருடங்களாக சிறையடைக்கப்பட்டிருந்த நிலையில், ஈரல் புற்று நோய் காரணமாக மரணமாகியிருந்தார்.
இந்த நிலையில், வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவியினை விடுவிக்கும் என சீன அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன
அதேவேளை, அவருக்கு உரிய வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை நேரத்தில் வழங்கப்பட்டிருந்தால், அவரை காப்பாற்றியிருக்க முடியும் என நோர்வேயில் உள்ள நொபல் பரிசு நிதியம் தெரிவித்துள்ளது
Related posts:
|
|