நைல் நதியில் படகு விபத்து : 24 மாணவர்கள் பலி!

Thursday, August 16th, 2018

வடக்கு சூடானின் ஊடாக ஓடும் நைல் நதியில் ஏற்பட்ட படகு விபத்தொன்றில் 24 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நைல்நதியைக் கடப்பதற்காக படகில் பயணித்த போது படகில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த அனர்த்தம் இடம்பெறும்போது படகில் 40க்கும் அதிகமான மாணவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பெண் ஒருவரும் பலியாகி உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: