நேபாளத்துக்கு சீனா உதவி!

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காகவும் மீட்புப் பணி நடவடிக்கைகளுக்காகவும் 10 இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியை சீனா வழங்கவுள்ளது.
நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன நாட்டின் துணை பிரதமர் வாங் யாங், அங்கு நடைபெற்ற இரு நாடுகளின் துணை பிரதமர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்போதே இந்நிதி வழங்கப்படும் என சினா தெரிவித்தள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து அங்கு பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 38 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாரிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
|
|