நேட்டோ அமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் – ட்ரம்ப்!
Wednesday, February 8th, 2017
அமெரிக்காவிடம் இருந்து நேட்டோ அமைப்புக்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “நாம் நோட்டோ அமைப்புக்கு ஆதரவளிக்கின்றோம். நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் சரியான முறையில் நிதி பங்களிப்பு செய்ய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை காலமும் அமெரிக்கா மேற்கொண்ட நிதி பங்களிப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, சில நேட்டோ நாடுகள் மிகக் குறைவான நிதி பங்களிப்பையே மேற்கொண்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த கருத்தினை அவர், ஃபுளோரிடாவில் உள்ள இராணுவ தளம் ஒன்றிலிருந்து கருத்து தெரிவித்த போதே குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க துருப்புக்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை வழங்குவதாகவும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், நோட்டோ அமைப்பு நாடுகளை ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்வரும் மே மாதம் சந்திக்கவுள்ளார் என அண்மையில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் நேட்டோவின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்ட்டன்பர்க்குடன் (Jens Stoltenberg), ட்ரம்ப் தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டதாகவும் அதன் போதே மேற்குறித்த சந்திப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


