நேட்டோ அமைப்பின் விமானங்களை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறித்தது?

Saturday, October 8th, 2016

நோர்வேயில் இருந்து வடக்கு ஸ்பெயின் திசையில் பறந்து கொண்டிருந்த நான்கு ஐரோப்பிய நாடுகளின் போர் விமானங்களை ரஷ்யாவின் இரு குண்டுவீசும் விமானங்கள் இடைமறித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நோர்வே, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் விமானங்களே அந்த நாடுகளின் வான் பகுதியில் டீ.வி – 160 விமானங்களால் ஈடையூறுக்கு உள்ளாகியுள்ளன.

ரஷ்யா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் நேட்டோ விமானங்களை ரஷ்ய போர் விமானங்கள் இடைமறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி இடம்பெற்றபோதும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு தற்போதே அது பற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளது.குறித்த நான்கு நாடுகளும் வான் ஒத்துழைப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டபோதே இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

coltkn-10-07-fr-01173135179_4847941_06102016_mss_cmy

Related posts: