நீரில் கலப்படம் ஆயிரக்கணக்கானோர் உடல்நிலை பாதிப்பு!

ஆயிரக்கணக்கானோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கை ஏற்படுத்திய உள்ளூர் குடிநீர் விநியோக கலப்படம் தொடர்பாக நியூசிலாந்து அரசு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தும் அதிகப்படியான கம்பிலோபாக்டர் பாக்டீரியா சுமார் 3000 மக்களை பாதித்துள்ளது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள ஹவ்லாக் நார்த் நகரில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அப்பகுதியில் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன மேலும் அதிகப்படியான மருத்துவ மனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளது.
இம்மாதிரியான சூழல்கள் நியூசிலாந்தில் நடப்பது அரிது, பொதுவாக குழாய் நீர் அங்கு சுத்தமானதாகவே இருக்கும்.
Related posts:
ஆத்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல் : கண்ணீர் சிந்தும் பிரான்ஸ்!
இராணுவ உதவி செய்யுமாறு சீனாவிடம் ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்த செய்தியை நிராகரித்தது சீனா!
சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் - ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்க...
|
|