நீரிலும், நிலத்திலும் இறங்கும் திறன் கொண்ட விமானத்தை தயாரித்தது சீனா!

நீரிலும், நிலத்திலும் இறங்கக்கூடிய பெரிய விமானம் ஒன்றை சீனா தயாரித்துள்ளது. ஏஜி-600 என்று அழைக்கப்படும் அந்த விமானம் மேலெழும்பி விமான ஓடுபாதை அல்லது நீரில் தரையிறங்க முடியும்.
குவாங்தொங் மாகாணத்தின் தெற்கு பகுதியில் பொதுமக்களின் ஆரவாரத்திற்கு இடையே இந்த விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தவும், கடல் பணகளுக்கும் இந்த விமானம் உதவும் என சீன பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள சீன தளங்களுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்கவும் இது உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், சீனாவால் தயாரிக்கப்பட்ட சிறிய ரக கடல் விமானம் ஒன்று அதன் அறிமுக பயணத்தின் போது, ஷாங்காய் நகருக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தீப்பற்றி எரிந்த பேருந்து: 30 பேர் படுகாயம்!
பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாக மார்டின் பதவியேற்பு!
வடகொரிய இராணுவத்தின் 75ஆவது ஆண்டு விழா - மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன்!
|
|