நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழுவில் முன்னிலையானார் ஜேக்கப் சூமா!
Tuesday, July 16th, 2019
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் சூமா முதன் முறையாக நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழுவில் முன்னிலையானார்.
அரசியலில் இருந்து தம்மை வெளியேற்றும் நோக்கிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்கள் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், பல ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என தெரிவித்தார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் பல தரப்பினரின் அழுத்தம் காரணமாக அவர் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் அவரது பிரதி ஜனாதிபதியாக கடமையாற்றிய Cyril Rampahosa, ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
பதவியேற்றதன் பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தென் ஆபிரிக்காவில் இருந்து ஊழலை முற்றாக அகற்றுவேன் என தெரிவித்தார்.
ஜேக்கப் சூமா ஜனாதிபதியாக கடமையாற்றிய 9 வருடங்கள் முற்று முழுதாக வீணாகியுள்ளதாகவும் மக்கள் எந்தவிதமான நன்மையையும் பெறவில்லை எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


