நியூசிலாந்தில் நிலநடுக்கம்!
Tuesday, October 30th, 2018
நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.
தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
நியூசிலாந்து பாரளுமன்ற கட்டிடம் நிலநடுக்கத்தால் குலுங்கியது. இதனால், அவை நடவடிக்கையில் பங்கேற்ற உறுப்பினர்கள் பீதி அடைந்தனர். பாரளுமன்றம் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் சேம்பர்ஸ் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது.
Related posts:
சர்ச்சையில் சிக்கிய அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தீ விபத்து: தென்கொரியாவில் 38 பேர் உயிரிழப்பு!
காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்ரேலியாவின் கி...
|
|
|


