நாட்டில் அமைதியை பேண அனைவரும் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!
Monday, January 23rd, 2023
நாட்டில் அமைதியை பேண மாநில பொலிஸ் மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே மேலதிக ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மாநில பொலிசாரும் மத்திய அமைப்புகளும் தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்ப திறன்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை ரோந்து செல்வது போன்ற பாரம்பரிய கண்காணிப்பை பொலிஸார் வலுப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் சீர்திருத்தம் காலாவதியான குற்றவியல் சட்டங்களை நீக்குதல், கடலோர மற்றும் எல்லைப் பாதுகாப்பு குறித்தும் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
ஹம்பாந்தோட்டை துறைமுகப்பணிகள் ஆரம்பம்!
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவ இந்தியா உறுதியுடன் உள்ளது - இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவி...
மின்சார பாவனையாளர்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்தல்!
|
|
|


