நவாஸ் ஷெரீப்பிற்கு அழைப்பாணை!

Tuesday, June 13th, 2017

பனாமா இரகசிய கணக்குப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயரும் உள்ளடங்கியிருந்த நிலையில், அது குறித்து விளக்கமளிப்பதற்கு ஆஜராகுமாறு பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்... நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நவாஸ் ஷெரீப்பிற்கு மத்திய புலனாய்வு அமைப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

உலகின் பல பிரபலங்கள் வரி ஏய்ப்புச் செய்து பல நாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும், இரகசிய வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு கடந்த வரும்பனாமா லீக்ஸ்என்ற பெயரில் ஆணங்களை வெளியிட்டிருந்தது.

இதில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர்களும் உள்ளடங்கியிருந்த நிலையில், இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து கூட்டு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், அக் குழுவின் முன்னால் நவாஷ் ஷெரீப் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமெனவும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: