தொடர் கொலைகள் தொடர்பாக இதுவரை 5,000 பேர் கைது!

வங்கதேசத்தில் தொடர்ச்சியாக பலரை குறி வைத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேலும் இரண்டாயிரம் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வங்க தேச போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைதுகளை அடுத்து, வியாழக்கிழமை தொடங்கி இன்றுவரை கைது எண்ணிக்கை ஐந்தாயிரமாக உயர்ந்திருக்கிறது.
கடந்த வாரங்களில் ஒரு கிறித்துவ கடைக்காரர், இந்து பூசாரி மற்றும் மூத்த போலிஸ் அதிகாரியின் மனைவி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களில் கடவுள் நம்பிக்கையற்றவர்கள், வலைப்பதிவாளர்கள், கல்வியாளர்கள், மதம் மற்றும் மதச்சார்பற்ற சிறுபான்மையின உறுப்பினர்களை குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் சுமார் நாற்பது நபர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்
Related posts:
ஜிகா வைரஸ் பெரியவர்களின் மூளையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது!
பூமியில் இருக்கிறார் ஜெயலலிதா : ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு!
|
|