தென் கொரிய அதிபர் மூன் ரஷ்யாவில்!
Friday, June 22nd, 2018
தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் மூன்று நாள் சுற்றுப் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். இரு நாட்டு நல்லுறவு மேம்பாடு வட கொரிய நிலவரம் போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் ரஷ்யா சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ரஷ்யா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே – இன் அதிபர் விளாடிமிர் புடினை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது பல்வேறு ஒப்பந்த ஆவணங்களில் இரு தயலைவர்களும் கையெழுத்திடுவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ரஷ்யா தென் கொரியா வட கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்து தென் கொரிய அதிபருடன் ஆலோசிக்கப்படும் என்று ரஷ்யா வெளியுறவுத் துறை இணையமைச்சர் இகோர் மோர்குலோவ் தெரிவித்தார்
Related posts:
சல்மான் கான் விடுதலை!
நைகரில் 50 மில்லியன் டொலரில் அமெரிக்க விமானத் தளம்!
இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்!
|
|
|


