தென்னாப்பிரிக்க உள்ளூராட்சி தேர்தலில் ஆளும் கட்சி பின்னடைவு!

Friday, August 5th, 2016

தென்னாப்பிரிக்காவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஏறக்குறைய பாதியளவு வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், நிறவெறி அரசு காலகட்டத்துக்கு பிறகு, ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மிக மோசமான தேர்தல் முடிவினை சந்திக்கும் என்று தெரிகிறது.

இது வரை பதிவான வாக்குகளில், ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த கடந்த நகராட்சி தேர்தலை விட, இது 10 சதவீதம் குறைவாகும்.ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கூட்டணி 30 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஜோஹனஸ்பெர்க் மற்றும் போர்ட் எலிசபெத் ஆகிய நகரங்கள் உட்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றுவதில் ஆளும் கட்சிக்கு ஜனநாயகக் கூட்டணி சவாலாக விளங்கிகிறது.

நாட்டில் நிலவும் அதிக அளவு வேலைவாய்ப்பின்மை மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை மையமாக கொண்டு நடந்த ஊழல் புகார்கள் ஆகியவை ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புகழை சேதப்படுத்தியுள்ளது.

Related posts: