துருக்கி நிலநடுக்கம் : 14 பேர் பலி!

துருக்கியில் நேற்று (24) வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன்.
அந்நாட்டு நேரப்படி இரவு 8.55 (17.55 GMT) மணியளவில் இடம்பெற்ற குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
மேற்படி நிலநடுக்கத்தில் சிக்கி 14 பேர் பலியானதோடு சுமார் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது வழக்கம். 1999ஆம் ஆண்டு மேற்கு நகரமான இஸ்மிட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தல் 17 ஆயிரம் பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பிரேசிலில் பொது செலவினத்திற்கு உச்ச வரம்பு!
கென்யாவில் அரசியல் குழப்பம் : உச்ச நீதிமன்றத்துக்கு சீல் வைப்பு!
ரஷ்யா - உக்ரைன் போர் – உலகை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடி - இத்தாலி பிரதமர் பிரதமர் மரியா டிராகி...
|
|