துருக்கி அதிபரின் உரை இருட்டடிப்பு: ஜெர்மனிக்கு கண்டனம்!

Tuesday, August 2nd, 2016

ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றியதை ஜெர்மனி தடைசெய்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துருக்கியிலுள்ள ஜெர்மனியின் மூத்த ராஜிய அதிகாரி ஒருவரை அழைத்து துருக்கி கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கலோனில் நடைபெற்ற துருக்கிய அதிபர் ஆதரவு பேரணி நடைபெறும்போது, எர்துவான் உரையாற்றுவது, அரசியல் முறுகல் நிலையை தூண்டும் என்று அஞ்சி, அதற்கு அனுமதி கோரி எர்துவான் சமர்ப்பித்த விண்ணப்பத்தை ஜெர்மனியின் அரசியல் சாசன நீதிமன்றம் நிராகரித்தது.

கடந்த மாதம் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பின்னர் மேற்குலக நாடுகளிலிருந்து கிடைக்க வேண்டிய ஆதரவு எர்துவானுக்கு கிடைக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக ஜெர்மனியின் இந்த முடிவு காட்டுவதாக துருக்கியிலிருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

ஜெர்மனியில், 30 லட்சம் துருக்கியர்கள் வாழ்கின்றனர். மிக அதிக எண்ணிக்கையில் துருக்கியர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு ஜெர்மனிதான்.

Related posts: