துருக்கியில் பேரழிவு – 3500 தாண்டியது உயிர் பலி – எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கை!

Tuesday, February 7th, 2023

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி வருகின்றனர்.

நே்றறு அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் குறைந்தது 3,500 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று அதிகாலை 04:17 (01:17 GMT) மணிக்கு காசியான்டெப் நகருக்கு அருகே 17.9 கிமீ (11 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான அகதிகள் வசிக்கும் துருக்கிய எல்லையில் உள்ள முகாம்களில் பல மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: