துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு!
Thursday, March 16th, 2023
கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து கூடாரங்களிலும் தற்காலிக கொள்கலன் வீடுகளிலும் தங்கியிருந்த மக்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் உள்ளிட்ட தொடர் நிலநடுக்கங்களில் சுமார் 48,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்ககது
000
Related posts:
அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்த 810 பேர் உயிரிழப்பு!
ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகளுடன் பயணிக்கும் பேருந்த நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தேசி...
ரஷ்ய போர் விமான தயாரிப்பு ஆலை, கடற்படை தளங்களுக்கு கிம் ஜோங் உன் விஜயம் - ஆயுதப் பரிமாற்றத்தை உறுதி...
|
|
|


